இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு நீதிமன்றம் தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார்.
அந்தக் கடன்தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூபாய் 21.78 கோடியாக செலுத்த வேண்டியுள்ளது.
வழக்கு: இந்த முழுத் தொகையையும் செலுத்தாமல் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஞானவேல் ராஜா தரப்பு வழக்கறிஞர், ரூபாய் 3.75 கோடியை உடனடியாகச் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்குச் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வாதத்தைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, “பல முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் கடனைச் செலுத்த எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை” எனக் கூறினார்.
இதன் விளைவாக, முழுத் தொகையையும் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் திடீர் தடையால், டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருந்த ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் ரிலீஸில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

