குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணக் கூடிய சீஸ்ஸி இறால் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
இறால் –500 கிராம்
உருளைக்கிழங்கு – 3
சீஸ் ஒன்றரை – கப்
சீஸ் துறுவல்- 100கிராம்
வெண்ணெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
தக்காளி – 2
சில்லி சோஸ் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம்- 2
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 5
உப்பு – தேவையான அளவு
முதலில் இறாலை சுத்தம் செய்து இறாலை வேகவைத்துக் கொள்ளுங்கள்.
வேக வைத்த இறாலுடன் சில்லி சோஸ் மற்றும் கடுகை ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.
கிளறிய பின்னர் மிளகுதூள் மற்றும் உப்புத்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்ந்து கலக்குங்கள்.
பின்னர் உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் உப்புத்தூள் சேர்த்து மசியுங்கள். பின் இறால் கலவையுடன் கலந்து கொள்ளுங்கள்.
அதன்பின்னர் சீஸ், சீஸ் துருவல், சோயா சோஸ் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
பரிமாறும் போது அலங்கரிக்க வெங்காயம், தக்காளி போன்றவற்றை வட்டவடிவ துண்டுகளால் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அவனில் வைக்கக் கூடிய தட்டில் வெண்ணெய் தடவி தட்டில் இறால் கலவையை சமமாக பரவி போட்டு வையுங்கள்.
முன்கூட்டிய சூடேற்றப்பட்ட அவனில் 200c உஷ்ணத்தில் 5 நிமிடங்கள் வைத்து எடுங்கள்.
பின்னர் அலங்கரிக்க வட்டவடிவில் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அதன் மீது தூவி அலங்கரித்து பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவைநிறைந்த சிஸ்ஸி இறால் தயார்.
#CooingRecipe