ருசி நிறைந்த நண்டு கட்லெட்

நண்டு என்றால் அதன் ஓட்டை உடைத்து சாப்பிடுவதற்கு குழந்தைகள் கஷ்டப்பட்டு ஒதுக்கி விடுவார்கள். அவர்களுக்கு நண்டை கட்லெட் செய்து அசத்துங்கள். விரும்பி உண்பார்கள்.

Crab cutlet

தேவையான பொருள்கள்:

நண்டு – 1/2 கிலோ

இஞ்சி,வெ.பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு – 2

பெரிய வெங்காயம் – 1

மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி

பாண் தூள் – 1 கப்

கோதுமை மா – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை

நண்டை நன்கு வேக வைத்து உடைத்து அதன் சதையை மட்டும் பிரித்து எடுத்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பின் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதனுடன் நண்டின் சதையை சேர்த்து உப்பு, இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விழுது, மசாலாளத் தூள், மிளகாய்த் தூள் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை போன்றவற்றை சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அடுப்பில் அந்தக் கலவையை வதக்கி கெட்டியாக எடுத்துக் வைத்துக்கொள்ளுங்கள்.

கோதுமாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். பின்பு வதக்கிய நண்டுக் கலவையுடன் சேர்ந்து உருண்டைகளாக தட்டி கோதுமை மா கரைசலில் நனைத்து பாண் தூளில் பிரட்டி பின் சூடான எண்ணெய்யில் பொரித்தெடுங்கள்.

இப்போது சுவையான நண்டு கட்லெட் ரெடி. இதனை சாஸுடன் சேர்த்து பரிமாறலாம்.

Exit mobile version