குழந்தைகள் விரும்பும் சொக்லேட் பாப்கார்ன்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் பாப்கார்ன், சொக்லேட் ஆகியனவும் அடங்கும். இவை இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாப்கார்ன் சோளம் – ஒரு கப்,
குக்கீஸ் சொக்லேட் – 50 கிராம்,
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – சிறிதளவு,

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சொக்லேட்டை சிறு சிறு துண்டுகளாக உடைத்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும்.

உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

பிறகு, தயாரித்த சொக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும். நன்கு குலுக்கி சீராக பரவ விடவும். சூப்பரான சொக்லேட் பாப்கார்ன் ரெடி. இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

ChocolatePopcorn2 475x375 1

#LifeStyle

 

Exit mobile version