இருமல் தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

1740738 thoothuvalai keerai soup

இருமல் தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலைகள் – 10
பூண்டு – 5 பல்
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா – தலா கைப்பிடியளவு
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு
துளசி இலைகள் – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10

செய்முறை:

சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

#lifestyle

Exit mobile version