நயன் – விக்கி தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் – குவியும் வாழ்த்துக்கள்

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.

இந்நிலையில், எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை நெட்டிசன்களும் தாறுமாறாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

310651194 470188615131152 1183173948221159133 n

#Cinema

Exit mobile version