பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை, ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.
சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் ‘சமுத்திரம்’, ‘பொக்கிஷம்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.nஅவர் பல்வேறு படங்களுக்குப் பின்னணி இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இசையமைப்பாளர் சபேஷின் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.