சினிமாசெய்திகள்

பிரபல இயக்குனருடன் இணைந்த யோகி பாபு!!

Share
tamilni 520 scaled
Share

பிரபல இயக்குனருடன் இணைந்த யோகி பாபு!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. RB Talkies சார்பில் S.R. ரமேஷ் பாபு மற்றும் Box office studios சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

படம் குறித்து நடிகர் யோகி பாபு கூறுகையில்.., “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள் .அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும்.

மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் பல தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா கூறுகையில்.., “இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.

படம் குறித்து நடிகை லவ்லின் சந்திரசேகர் கூறுகையில், “இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன்.

ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி” என்றார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, V. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.L. சுபேந்தர் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பை R.ராமர் கையாள்கிறார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...