10 14 scaled
சினிமாசெய்திகள்

யோகி பாபு ஷூட்டிங் சரியாக வருவதில்லையா? கொடுத்த பதில்

Share

யோகி பாபு ஷூட்டிங் சரியாக வருவதில்லையா? கொடுத்த பதில்

நடிகர் யோகி பாபு தான் தற்போது தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். சந்தானம் ஹீரோவாகிவிட்ட பிறகு தற்போது எல்லா ஹீரோ படங்களிலும் யோகி பாபு தான் காமெடியனாக நடித்து வருகிறார்.

தற்போது அட்லீ இயக்கும் ஹிந்தி படமான ஜவான் படத்திலும் அவர் காமெடியனாக நடித்து இருக்கிறார். மேலும் பல படங்களிலும் யோகி பாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

நடிகர் யோகி பாபு ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி சமீபத்திய பட விழாவில் அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“சில படங்களில் நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் மட்டுமே நான் நடிக்கிறேன். ஆனால் அந்த படத்தின் போஸ்டரில் என் போட்டோவை பெரிதாக போடுகின்றனர். அப்படி செய்ய வேண்டாம், அது மக்களை ஏமாற்றும் செயல் என சில தயாரிப்பாளர்களை கண்டித்தேன்.”

“அப்படி செய்பவர்களால் நிஜத்திலேயே நான் lead ரோலில் நடிக்கும் படங்கள் தான் பாதிக்கப்படுகிறது. நான் அப்படி போஸ்டர் விஷயத்தில் கண்டித்ததால் என்னை பற்றி இப்படி வதந்தி பரப்புகிறார்கள்” என யோகி பாபு கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....