உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்
திரையுலகில் முன்னணி நட்சத்திரத்தின் படங்கள் வெளிவந்தால் உடனடியாக கேட்க்கும் முதல் கேள்வி என்னவென்றால், அப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்று தான்.
அதுவும் சமீபகாலமாக ரூ. 500 கோடியை கடந்துவிட்டாதா, ரூ. 1000 கோடியை கடந்துவிட்டதா என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
கடைசியாக ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்றால் அது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் தான். இதன்பின் வேறு எந்த நடிகரின் த்ரிஜப்படம் ரூ. 1000 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்தெந்த திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது தெரியுமா, வாங்க பார்க்கலாம்..
தங்கல் – ரூ. 2000 கோடி
பாகுபலி 2 – ரூ. 1800 கோடி
ஆர்.ஆர்.ஆர் – ரூ. 1300 கோடி
கே.ஜி.எஃப் 2 – ரூ. 1250 கோடி
பதான் – ரூ. 1050 கோடி
ஜவான் – ரூ. 1000 கோடி