அவங்க இல்லனா இவரு இல்ல… மணி -ரவீனா ரகசியத்தை போட்டுடைத்த மாயா…

tamilni 136

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. வாரயிறுதி நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 98வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரமோக்களில் போட்டியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூலாக பேசியதை பார்க்க முடிந்தது. சீசன் துவக்கத்தில் இருந்தே பல்வேறு போட்டியாளர்களின் பிணக்குகளை பஞ்சாயத்து தீர்த்து வைத்து வருகிறார் கமல்ஹாசன்.

தொடர்ந்து சக போட்டியாளர்களின் தனித்துவம் குறித்து ஹவுஸ்மேட்சிடம் கேட்டறிந்தார் கமல்ஹாசன். முன்னதாக கடைசி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தினேஷ், விசித்ராவின் கெத்துதான் அவரது Unique selling point என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய மாயா, யாரை எப்படி யூஸ் செய்து அவருக்கு தேவையானதை முடிக்க வேண்டும் என்று விஷ்ணுவிற்கு நன்றாக தெரியும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய விசித்ரா, மாயா 200 சதவிகிதம் நிகழ்ச்சியில் என்டர்டெயின்மெண்ட் செய்தாக கூறிய நிலையில் தொடர்ந்து பேசிய மாயா, மணியின் Unique selling point ரவீனா என்று கூறினார். இதைக்கேட்ட நடிகர் கமல்ஹாசன், வாய்விட்டு சிரித்தார்.

Exit mobile version