தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

125086256

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்துப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ரங்கராஜ் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரவில்லை என்று ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜின் முந்தைய பதில் “நான் டி.என்.ஏ. பரிசோதனையை மறுக்கவில்லை, குழந்தை என்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் கவனித்துக் கொள்வேன்” என்று ரங்கராஜ் முன்பு தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரங்கராஜுக்குக் கடுமையான சவால் விடுத்துப் பதிவிட்டுள்ளார்.

“என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவுசெய்து டி.என்.ஏ. டெஸ்டுக்கு வர சொல்லுங்க. ஸ்டேட்மென்ட் விட்டு 15 நாள் ஆச்சு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு. தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து டெஸ்டுக்கு வாங்க கணவரே.”

திருமணம் மற்றும் குழந்தை விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், நீதிமன்ற மற்றும் மகளிர் ஆணைய விசாரணைகளின் போக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version