குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- உண்மை காரணத்தை கூறிய பிரபலம்

list of new comalis in cook with comali season 51714462181 0

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- உண்மை காரணத்தை கூறிய பிரபலம்\

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளன.

பாடல், நடனம், காமெடி நிகழ்ச்சி என நிறைய உள்ளது. அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன் புதுவித கான்செப்டில் ஒளிபரப்பாகி வந்தது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி.

முதல் 4 சீசன்களை விட இந்த 5வது சீசனில் எல்லாமே புதிது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் முதல் 4 சீசன்கள் போல் இந்த 5வது சீசனிற்கு பெரிய ரீச் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

முன்பு ஒரு எபிசோட் ஒளிபரப்பானாலே நிறைய வீடியோக்கள் வைரலாகும், ஆனால் இப்போது அப்படி இல்லை.

இந்த நிலையில் 5வது சீசன் ஒளிபரப்பான வேகத்தில் அதில் இருந்து வெளியேறி இருந்தார் நாஞ்சில் விஜயன், அதோடு இந்த நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் நான் இனி கலந்துகொள்ள மாட்டேன் என கூறியிருந்தார்.

அண்மையில் ஒரு பேட்டியில், நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பலரும் பல காரணங்கள் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் எனக்கு அங்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, நான் பேசும் பல விஷயங்களை எடிட் செய்து ஷோ ஒளிபரப்புகிறார்கள், இதுகுறித்து கேட்டாலும் சரியான பதில் இல்லை.

அடுத்த எபிசோடிற்கு அழைப்பார்கள் என இருந்தால் அதற்கும் பதில் இல்லை. என்ன ஆனது, நான் என்ன கண்டன்ட் தரவில்லையா என நிறைய முறை கேட்டும் தயாரிப்பு நிறுவனத்தில் பதில் இல்லை.

எனவே தான் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.

Exit mobile version