tamilni Recovered Recovered 2 scaled
சினிமாசெய்திகள்

எந்த நேரத்தில ஆரம்பிச்சாங்களோ? வாடிவாசலை டிராப் செய்த வெற்றிமாறன்.. நஷ்ட ஈடுக்கு புது ஐடியா..!

Share

எந்த நேரத்தில ஆரம்பிச்சாங்களோ? வாடிவாசலை டிராப் செய்த வெற்றிமாறன்.. நஷ்ட ஈடுக்கு புது ஐடியா..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் தயாராக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு கூட நடைபெற்றது என்பதும் இந்த படத்தில் ஒரிஜினலுக்கு காளையை பயன்படுத்துவதற்காக ஒரு காளையுடன் சூர்யா பழகி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’விடுதலை’ மற்றும் ’விடுதலை 2’ ஆகிய படங்களை முடித்துவிட்டு ’வாடிவாசல்’ படத்தை இயக்கலாம் என்று வெற்றி மாறன் திட்டமிட்டு இருந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்திற்கு இரண்டு ஆண்டும் ’வாடிவாசல் 2’ படத்திற்கு இரண்டு ஆண்டுகளும் அவர் எடுத்துக் கொண்டதை எடுத்து ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்க முடியாமலே உள்ளது.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதை வெற்றிமாறன் உறுதி செய்ததையும் சூர்யா ரசிக்கவில்லை என்றும் அமீருடன் நடிக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை இயக்கும் வாய்ப்பும் வெற்றிமாறனுக்கு கிடைக்க உள்ளதால் ’வாடிவாசல்’ படத்தை வெற்றி மாறன் டிராப் செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதுவரை ’வாடிவாசல்’ படத்திற்காக செய்த செலவு பணத்தை அடுத்த படத்தில் கழித்து கொள்ளுங்கள் என்றும் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி தருகிறேன், அந்த படத்தில் நஷ்ட ஈடை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று வெற்றிமாறன் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே ’வாடிவாசல்’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் தான் என கோலிவுட் திரை உலகினர் கூறி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...