தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி சின்னம் என்ன?

tamilni 71

தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி சின்னம் என்ன?

தளபதி விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணங்களை தொடங்கியுள்ளார்.

விஜயின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில் விஜய், கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

கட்சியின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்து பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version