’தல’ கேள்விப்பட்டிருக்கோம்.. அது என்ன ரெட்ட தல? 2 நடிகைகளுடன் டூயட் பாடும் பிரபல ஹீரோ..!
நடிகர் அஜித்தை ’தல’ என்று அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வருவார்கள் என்பதும் அதன் பின்னர் ஒரு கட்டத்தில் தன்னை ’தல’ என்று அழைக்க வேண்டாம் அஜித் அல்லது ஏகே என்று அழைத்தால் போதும் என்று அஜித் அறிக்கை விட்ட பிறகு தற்போது ’தல’ என்ற பட்டம் சிஎஸ்கே தோனிக்கு சென்று விட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் இன்னும் சில ரசிகர்கள் அஜித்தை ’தல’ என்றுதான் அழைத்து வருகிறார்கள் என்பதும் தற்போது கூட சினிமா ரசிகர்கள் ’தல’ என்றால் உடனே அஜித் ஞாபகம் தான் வரும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தல’ என்ற பெயரை சினிமா டைட்டிலில் பயன்படுத்த சில நடிகர்கள் திட்டமிட்ட நிலையில் தற்போது அதை நடிகர் அருண் விஜய் தனது அடுத்த படத்தில் பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெறும் ’தல’ என்று மட்டும் வைக்காமல் ’ரெட்ட தல’ என்று அவரது படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை ’மான் கராத்தே’ இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு தான் ’ரெட்ட தல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இட்லானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தை மிகப்பெரிய பொருள் செலவில் பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- actor arun vijay
- ajith arun vijay
- arun vijay
- arun vijay aarthi
- arun vijay family
- arun vijay fans
- arun vijay fans festival
- arun vijay hits
- arun vijay latest
- arun vijay love
- arun vijay love marriage
- arun vijay mafia chapter 1
- arun vijay marriage
- arun vijay mission
- arun vijay movies
- arun vijay sister
- arun vijay son
- arun vijay songs
- arun vijay wife
- inayae arun vijay
- mafia arun vijay
- mission arun vijay
- thadam arun vijay
- vijay prakash