திருமணம் செய்யப்போகும் சாய் தன்ஷிகாவிற்கும் விஷாலுக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?

29 8

முன்னணி நடிகர் விஷாலின் திருமணம் எப்போது என்பதே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கேள்வியாக இருந்த வந்தது.

அவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில், நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக நேற்று மாலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

விஷால் – தன்ஷிகா இருவரும் கடந்த 15 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறியுள்ளது.

விஷாலின் பிறந்தநாளான வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி இவர்களுடைய திருமணம் நடக்கவுள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. நடிகை சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் நடுவில் 12 வயது வித்தியாசம் உள்ளது.

Exit mobile version