கேரளாவில் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஸ்பெஷல் நபரை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள விஜய்க்கு அங்கு ரசிகர்கள் அமோகமாக வரவேற்பு கொடுத்தார்கள். தினமும் ஹோட்டல் மற்றும் மைதானத்திற்கு விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடி வருகிறார்கள்.
அந்த வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் சமூ வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் மைதானத்தில் நடக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
தினமும் ரசிகர்களை சந்தித்து வரும் விஜய் இன்று தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஸ்பெஷல் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜய்யை கண்டு படு சந்தோஷப்பட அவருடன் இணைந்து நடிகரும் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.