24 66da6a511d058
சினிமா

முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

முதல் நாளே ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பல சாதனைகளை படைக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி GOAT அடுத்தடுத்த என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...