டேனியல் பாலாஜி மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத விஜய், தனுஷ்! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான டானியல் பாலாஜி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பொல்லாதவன், விஜயின் பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல், பைரவா, வட சென்னை ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும்.
48-வயதான இவருக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது உயிரிழந்த டானியல் பாலாஜியின் உடல், அவர் பிறந்து வளர்ந்த, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்த நிலையில், பெரிய நடிகர்களான தனுஷ், விஜய் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்காதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, டேனியல் பாலாஜிக்கு நேரில் அஞ்சலி செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்களும், தமது இரங்களை தெரிவித்து வரும் நிலையில், தனுஷ் மற்றும் விஜய் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையாம்.
தனுஷின் பொல்லாதவன், வட சென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து பாலாஜி இரண்டு படங்களில் நடித்துள்ள போது, அவரின் மரணத்திற்கு தனுஷ் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வர இல்லை. அதைப்போல விஜய் நடித்த பைரவா படத்திலும் பாலாஜி நடித்துள்ளார். அவரும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.