ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கேர்ள் பிரண்ட். இந்த படத்தில் தீட்சித் ஷெட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்காக ராஷ்மிகா மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். இவரது உழைப்பு வீண்போகாத வகையில் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல், நல்ல வசூலையும் பெற்று வருகிறது,
இந்நிலையில், தி கேர்ள் பிரண்ட் படத்தின் வெற்றி கொண்டாட்ட விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். பிரபலங்கள், படக்குழுவினர், ஊடகங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவிடம் வந்த விஜய் தேவரகொண்டா, அவரது கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்தார். ராஷ்மிகா கையில் விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

