நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends), மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, விஜய் மற்றும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் பிரபலமாக உள்ளன.
‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மலையாளத் திரைப்படமான அதே பெயரைக் கொண்ட ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் தழுவலாகும்.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.