tamilni 315 scaled
சினிமாசெய்திகள்

நானும், Vijay-ம் Meet பண்ணும்போது நிறைய விஷயங்கள் பேசுவோம்- ஓபனாகப் பேசிய நடிகர் பிரசாந்த்

Share

நானும், Vijay-ம் Meet பண்ணும்போது நிறைய விஷயங்கள் பேசுவோம்- ஓபனாகப் பேசிய நடிகர் பிரசாந்த்

ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யின் அடுத்த படமான, அவரது 68-ஆவது படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம், மிக பிரமாண்டமாக போடப்பட்ட நிலையில், ‘லியோ’ ரிலீசுக்கு முன்பே படப்பிடிப்பும் துவங்கியது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வருகிறார். படக்குழு ‘லியோ’ ரிலீசுக்கு பின்னரே தளபதி 68 படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள், உள்ளிட்ட அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் லியோ படம் வெளியான பின்னரும், படம் குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்றைய தினம் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோ மூலம் இப்படத்தில் பிரபுதேவா,சினேகா,பிரசாந்த்,லைலா என 90 கிட்ஸ் பிரபலங்கள் நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படியான நிலையில் விஜய் குறித்து பிரசாந்த் ஒரு இன்டர்வியூவில் பேசியுள்ளார். அதாவது விஜய்யும் நானும் நிறைய இடத்தில மீட் பண்ணி பேசியிருக்கிறோம். நம்ம குடும்பத்தில ஒருத்தர் மாதிரி தான் அவர், தெரியாத விஷயங்கள் எல்லாம் அவர் கிட்ட அதிகமாக பேசியிருக்கிறோம் என்று சொல்கின்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...