சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விஜய் பட வில்லன்! ஷூட்டிங் வீடியோவுடன் வந்த SK 23 அப்டேட்

8

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த விஜய் பட வில்லன்! ஷூட்டிங் வீடியோவுடன் வந்த SK 23 அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்.

இடைவெளிக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அடுத்து சல்மான் கான் நடிக்கும் ஹிந்தி படத்தை முருகதாஸ் இயக்குகிறார். அதுவும் SK 23 மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜாம்வால் தற்போது SK 23 படத்தில் இணைந்து இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் வித்யுத் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இதை முருகதாஸ் அறிவித்து இருக்கிறார்.

Exit mobile version