24 66c96f5cf271c
சினிமா

விடுதலை படத்தின் மூன்றாம் பாகமா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

Share

விடுதலை படத்தின் மூன்றாம் பாகமா? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார் நடிகர் சூரி.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. ஆனால், படப்பிடிப்பு நீண்டுகொண்டே போவதாலும், இன்னும் பல கதாபாத்திரங்கள் படத்திற்கும் வந்துள்ள காரணத்தினாலும் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியரின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், விடுதலை முன்றாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை இரண்டாம் பாகத்திற்கான ரன் டைம் 4 மணிநேரமாக இருக்கிறது என்றும், இதனால் மூன்றாம் பாகம் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் விடுதலை மூன்றாம் பாகம் உருவாகுமா என்று.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....