தமிழ்நாட்டில் 10 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

24 671490181a0b9

தமிழ்நாட்டில் 10 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கிய கருத்தையும் இப்படத்தில் இயக்குனர் ஞானவேல் பேசியிருந்தார்.

முதல் வாரம் தமிழ்நாட்டில் வசூலில் பட்டையை கிளப்பி வந்த வேட்டையன் திரைப்படம், கடந்த சில நாட்களாக வசூலில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வேட்டையன் படம் 10 நாட்களில் தமிழகத்தில் ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version