24 670ca6bb3a7cf
சினிமாசெய்திகள்

திட்டமிட்டு குறைக்கப்பட்டதா வேட்டையன் அமெரிக்கா வசூல்.. கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்

Share

திட்டமிட்டு குறைக்கப்பட்டதா வேட்டையன் அமெரிக்கா வசூல்.. கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்

கடந்த வாரம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். உலகளவில் 4 நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் கடந்துள்ளது.

ரஜினிகாந்த் படம் என்றால் முக்கிய இடங்களில் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படி ரஜினிகாந்த் வசூல் சாதனை படைத்த இடங்களில் ஒன்று வட அமெரிக்கா. ஆம், வட அமெரிக்காவில் ஜெயிலர் திரைப்படம் 7.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.

இன்று வரை தமிழில் வெளிவந்த எந்த படமும் அந்த வசூல் சாதனையை முறியடிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் 4 நாட்களில் 2.4 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது.

ஆனால், இதற்கு ரசிகர்கள் கூறும் காரணம், வேட்டையன் படத்தை திட்டமிட்டே வட அமெரிக்காவில் சரியாக ரிலிஸ் செய்யாமல், வசூலை குறைத்துவிட்டனர், விநியோகஸ்தர் ஒரு விஜய் ரசிகர் அதனால் தான் அப்படி செய்துவிட்டார் என கூறிவருகின்றனர்.

மேலும், தெலுங்கு விமர்சனம் பார்த்து அதிக காட்சிகள் திரையிடலாம் என விநியோகஸ்தர் சொன்னார், யாராவது இப்படி செய்வார்களா, ரஜினிக்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகம், ஜெய்லர் வட அமெரிக்காவில் தெலுங்கு வெர்ஷனே கோடி கணக்கில் வசூல் செய்தது, அப்படியிருக்க, எப்படி விநியோகஸ்தர் இந்த மாதிரி சொல்லலாம் என ரஜினி ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் விநியோகஸ்தர் மிக கோபமாக, நான் பணம் போட்டவன் நானே இப்படி ஏன் செய்ய வேண்டும், ஆம், நான் பெருமையாக சொல்வேன் விஜய் ரசிகன் என, ஆனால், அதற்காக இப்படிப்பட்ட வேலையை நான் ஒரு போதும் செய்வது இல்லை, நான் தொடர்ந்து என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று கடுமையாக பதில் அளித்திள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...