நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
விஷாலின் அடுத்த படமான ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஷாலின் 31ஆவது திரைப்படமான ‘வீரமே வாகை சூடும்’ படத்தை இயக்குநர் து.பா சரவணன் இயக்கி வருகிறார்.
சில மாதங்களாக படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
டிசம்பர் மாதம் ‘வீரமே வாகை சூடும்’ வெளியாகும் என விஷால் ருவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில்,
படத்தின் டீஸர், சிங்கிள் பாடல், போன்ற புரமோஷன் பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் ஆரம்பித்துவிடும் என கூறப்படுகின்றது.
விஷால் நடிப்பில் ‘எனிமி’, ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’ என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதால் விஷால் ரசிகர்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.