என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!
சினிமாசெய்திகள்

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

Share

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

சுகுமார் வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ் டிவியின் ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே perform செய்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது. தவசி என்ற படத்தில் அவர் வடிவேலு போலவே மேனரிசம் காட்டி நடித்து இருக்கிறார்.

அதே போல நடிக்க பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் இருந்து பேர் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்று இருக்கின்றனர்.

‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இறுக்கியாமே’ என வடிவேலு கேட்டாராம். ‘அப்படி வாய்ப்பு வருகிறது, முதல் படம் என்பதால் நடித்துவிட்டேன், இனி நடிக்க மாட்டேன் அண்ணே’ என சுகுமார் பம்மி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள்.

இந்த அவமானத்தில் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். என் மனைவி தான் என்னை தடுத்தார்.

அதற்கு பிறகு தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி முற்றிலும் வேறு விதமாக நடித்தேன் என சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...