24 66cbeaa86893e
சினிமா

3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் வாழை. தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றிகளுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாழை தான் இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டுமாம். இப்படத்தின் கதையை தான் முதன் முதலில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது எழுதியுள்ளார். தனது சிறுவயதில் அனுபவித்த வலிகளை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வலிகளை திரையின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தினார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் கலங்கவைத்தது.

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாழை திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...