சர்ச்சைக்குரிய பேட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய த்ரிஷா .. என்ன செய்ய போகிறார் ஏ.வி.ராஜூ..!

tamilni Recovered 14

முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ என்பவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ள நடிகை த்ரிஷா அதில் 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ பேட்டி அளித்த போது கூவத்தூருக்கு த்ரிஷா வரவழைக்கப்பட்டதாகவும் அதற்காக அவருக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு எதிராக திரண்டது என்பதும் கண்டனம் தெரிவித்தது என்பதும் த்ரிஷாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா தரப்பிலிருந்து ஏவி ராஜு என்பவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வக்கீல் நோட்டீசில் முன்னணி ஊடகம் ஒன்றின் மூலம் ஏவி ராஜு நிபந்தனை ஏற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அது மட்டுமின்றி கடந்த நான்கு நாட்களாக தான் மன உளைச்சலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்ட ஏவி ராஜு தற்போது முன்னணி ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நஷ்ட ஈடு எவ்வளவு என்பது குறித்து இனிமேல் தான் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version