1 20
சினிமா

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

Share

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் ஜோடியாக நடிக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் GOAT படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் நடமாடியிருந்தார்.

இந்த பாடல் வேற லெவலில் ஹிட்டானது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை நடிகை திரிஷா சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. நடிகை திரிஷா தனது ஆரம்பகால கட்டத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலின் செய்து வந்தார் என்பதை அறிவோம்.

அப்போது அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் “நான் சினிமாவில் நடிக்க வர மாட்டேன், மாடலின் மட்டும் தான்” என கூறியுள்ளார். ஆனால், அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். இன்று உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....