35 8
சினிமா

இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும்.. தக் லைஃப் படம் குறித்து மனம் திறந்த த்ரிஷா

Share

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

த்ரிஷா நடிப்பில் தற்போது திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று திரிஷா நடனத்தில் ‘சுகர் பேபி’ என்ற 2-வது பாடல் வெளியானது.

இந்நிலையில், இப்படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில், ” இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என கூறும்போது நான் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை.

ஆனால் அப்போதே எங்களின் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும், அதே நேரம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்குத் தெரியும். இவை அனைத்தும் அறிந்த பின்தான் நான் இந்தப் படத்தில் கையெழுத்திட்டேன்.

கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் எவ்வளவு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டனர் என்பதை கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது ஒரு மாயாஜாலம் போல இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...