ஒரே படத்தில் தனது சம்பளத்தை உயர்த்திய அனிமல் பட நடிகை.. எத்தனை கோடி தெரியுமா?

24 66ed0e37122a5

ஒரே படத்தில் தனது சம்பளத்தை உயர்த்திய அனிமல் பட நடிகை.. எத்தனை கோடி தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிப்தி டிம்ரி. ‘லைலா மஜ்னு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிப்தி.

அதை தொடர்ந்து, ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன்மூலம் பிரபலமானவர்.

அதை தொடர்ந்து, விக்கி கவுசல் ஜோடியாக ‘பேட் நியூஸ்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்காக திரிப்தி ரூ.80 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். ஆனால் அதன் பின் அவர் நடித்த படங்களின் வெற்றி மற்றும் அடுத்தடுத்து வரும் பட வாய்ப்பை கருதி திரிப்தி அவரது சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.

தற்போது, இவர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version