சினிமாவிற்காக தங்களது பெயரை மாற்றிக்கொண்ட பிரபல நடிகைகள்- யாரெல்லாம் மாற்றினார்கள் பாருங்க
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னை எந்த அளவிற்கும் அதாவது உடலை வருத்திக் கொண்டு நடிப்பார்கள்.
அப்படி கமல்ஹாசன் தொடங்க விக்ரம், சூர்யா என பல நடிகர்களை உதாரணத்துக்கு கூறலாம். சிலர் சினிமாவிற்காக தங்களது பெயரை மாற்றிக்கொண்டு நடித்து வருவார்கள்.
ஒருசமயம் அவர்களே மாற்றுவார்கள், சில சமயங்களில் இயக்குனர்கள் பெயரை மாற்றி வைப்பது உண்டு. 80களில் எடுத்துக்கொண்டால் பல பிரபலங்களின் பெயர்கள் இயக்குனர்களால் மாற்றப்பட்டுள்ளது.
அப்படி தமிழ் சினிமாவில் தங்களது பெயரை மாற்றிக்கொண்டு வலம் வரும் நாயகிகளின் விவரங்களை காண்போம்.
லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் நிஜ பெயர் டயானா மரியம் குரியன் தான்.
திரையுலகை சேர்ந்த பலரும் இவரை ஸ்வீட்டி என்று தான் அழைப்பார்கள், செல்லமாக அழைக்கிறார்கள் என நினைப்போம். ஆனால் உண்மையில் அனுஷ்காவின் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி தானாம்.
தமிழ், தெலுங்கு என ஒருகாலத்தில் செம பிஸியான நடிகையாக வலம் வந்த அஞ்சலியின் நிஜ பெயர் பாலதிரிபுரசுந்தரியாம்.
அழகிய லைலா என ஒரேஒரு பாடலில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை பெற்ற ரம்பாவின் நிஜ பெயர் விஜயலட்சுமியாம்.
தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை பாவனாவின் இயற்பெயர் கார்த்திகா மேனன்.
ரசிகர்களால் சிரிப்பழகி என்று பெயர் பெற்ற நடிகை சினேகாவின் நிஜபெயர் சுஹாசினி. சினிமாவுக்காக சினேகா என மாற்றியுள்ளார்.