மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பல நடிகர் கலந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட இவர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டேன், ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாங்க இயலாது எனக் கூறி அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
மணிரத்தினம் தனது ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்தது தனக்கு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
#Rajini #PonniyinSelavan