பிரபலத் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகர் அபிநய் (Abhinay) இன்று (நவம்பர் 11) காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
இவர் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அத்துடன், சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, மற்றும் ‘காக்கா முட்டை’ ஆகிய திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் வழங்கியுள்ளார்.
நடிகர் அபிநய்யின் மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

