இந்தியாசினிமாசெய்திகள்

‘சேரி’ என்றால் இது தான் அர்த்தம்., புது விளக்கம் அளித்த குஷ்பு

Share
2 1 6 scaled
Share

‘சேரி’ என்றால் இது தான் அர்த்தம்., புது விளக்கம் அளித்த குஷ்பு

சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வரும் நிலையில், அவர் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்ததன்படி, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் நெட்டிசன் ஒருவர், “மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பு, தற்போது மகளிர் ஆணையம் த்ரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது.

இதை வச்சாவது தாமரைக்கு இரண்டு ஓட்டு வருமா என்ற நட்பாசையில் செய்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, “திமுக குண்டர்கள் இப்படித்தான் முட்டாள்தனமான மொழியில் பேசுவார்கள். ஒரு பெண்ணை அவமதிக்கவோ, மன்னிக்கவோ உங்களை போல சேரி மொழியில் பேச முடியாது” என்றார்.

நடிகை குஷ்புவின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் மற்றும் இயக்குநர் பா,ரஞ்சித் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு சேரி மொழி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், “பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் நிற்பேன்.

பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்று அர்த்தம். அதை அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்” என்றார்.

Share
Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...