இது தாங்க வளர்ச்சி, கடின உழைப்பால் அப்படியே மாறிய விஜய் சேதுபதி வாழ்க்கை
விஜய் சேதுபதி இன்று இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் என கூறலம். ஆம், ஹிந்தியிலும் அவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது 50 படங்களை கடந்துவிட்டார். இவரின் 50வது படமான மகாராஜா அடுத்த வாரம் ரிலிஸாகவுள்ளது.
இதன் ப்ரோமோஷன் வேலைகளில் செம பிஸியாக உள்ளார். இதில் ஒரு கட்டமாக துபாய்-ல் உள்ள பூர்ஜ் கலிபா கட்டிடத்தில் விஜய் சேதுபதி புகைப்படம் வர, ஒரு காலத்தில் இதே துபாயில் விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு வந்த போது, அங்க எடுத்த புகைப்படக் ஒன்று வைரல் ஆக, இது தாங்க வளர்ச்சி மனுஷன் எங்கிருந்து எங்கு வந்துள்ளார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.