tamilni 166 scaled
சினிமாசெய்திகள்

இருக்கிற படத்தை முடிக்கவே பணமில்லை.. அதுக்குள்ள லைகாவின் இன்னொரு பெரிய பட்ஜெட் படமா?

Share

இருக்கிற படத்தை முடிக்கவே பணமில்லை.. அதுக்குள்ள லைகாவின் இன்னொரு பெரிய பட்ஜெட் படமா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ அஜித் நடித்துவரும் ’விடாமுயற்சி’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது என்பதும் ஒரே நேரத்தில் பெரிய நடிகர்களின் படத்தை தயாரித்து வருவதால் இந்நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் லைகாவுக்கு கை கொடுக்க பல முக்கிய நபர்கள் இருப்பதாகவும் அதனால் பொருளாதார சிக்கலை அந்த நிறுவனம் எளிதில் சமாளித்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இருக்கிற படங்களையே முடிக்க முடியாமல் பொருளாதார சிக்கலில் லைகா இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்ததாக இன்னொரு பெரிய படத்தை இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் லீட் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஞானவேல் இதுகுறித்து லைகாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கண்டிப்பாக இரண்டாம் பாகத்தையும் எடுத்து விடுவோம் என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பட்ஜெட் அதிகமாகும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதையும் லைகா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் முதல் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றால் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை எடுத்து விடுவோம், செலவு பற்றி கவலை இல்லை என்று லைகா கூறியதாகவும் கோலிவுட் செய்திகள் பரவி வருகிறது.

எனவே ’வேட்டையன்’ படம் ரிலீஸ் ஆனவுடன் அந்த படம் வெற்றி பெற்றால் உடனே ’வேட்டையின் 2’ படமும் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...