கங்குவா படத்தின் முக்கிய பணி இன்று முதல் ஆரம்பம்.. சூர்யாவின் மாஸ் புகைப்படம்..!
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கங்குவா’. தமிழ் உள்பட 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாகவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது தொழில் நுட்ப பணிகள் ஆரம்பம் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்டமாக ’கங்குவா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு சூர்யா டப்பிங் பேசும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். ’கங்குவா’, ‘தங்கலான்’ ‘ரெபல்’ஆத்னா உட்பட பல முக்கிய படங்களின் தொழில்நுட்ப பணிகளை பொறுப்பேற்று நடத்தி வரும் ஆத்நாத் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ என்ற அலுவலகத்தில் தான் தற்போது ’கங்குவா’ படத்தின் டப்பிங் பணியும் நடைபெற்ற வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
டப்பிங் பணியின்போது சூர்யாவுடன் சிறுத்தை சிவா, மதன் கார்த்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்னும் ஒருசில நாட்கள் சூர்யா தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடிப்பார் என்றும் அதன் பிறகு இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வரும் இந்த படத்தில் சூர்யா, பாபிதியோ, திஷா பதானி, நடராஜ், ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.