தம்பி ஹீரோவாக நடித்த படம்.. பார்த்துவிட்டு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் சொந்த தயாரிப்பிலும் பல படங்கள் எடுத்து வருகிறார்.
தனது தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தையும் லாரன்ஸ் தயாரித்து வருகிறார். தனது தம்பிக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை நீண்டகாலமாக இருப்பதாகவும் அதை நிறைவேற்ற போவதாகவும் முன்பே அறிவித்தார் லாரன்ஸ்.
தற்போது எல்வின் ஹீரோவாக நடிக்கும் புல்லட் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் முழு படத்தையும் பார்த்த லாரன்ஸுக்கு தம்பியின் நடிப்பு அதிகம் பிடித்து இருந்ததாம்.
அதனால் உடனே ஒரு சொகுசு காரை வாங்கி எல்வினுக்கு கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதை அவரே இன்ஸ்டாவிலும் அறிவித்து இருக்கிறார்.