1 38
சினிமா

மரணிப்பதற்கு முன்னர் இருவரை வாழ வைத்த பெண்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Share

மரணிப்பதற்கு முன்னர் இருவரை வாழ வைத்த பெண்: குடும்பத்தினர் நெகிழ்ச்சி

மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தமையினால் இருவர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை – லுனம நோனகம ஹெல்பேஜ் வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சுசாந்தா (57) என்ற தாயே தனது இரு சிறுநீரகங்களையும் மேலும் இருவருக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இவரது மூளைக்குள் விஷக்கிருமி நுழைந்தமையினால் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதற்கமைய, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அமைய இரண்டு சிறுநீரகங்களும் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹிருஷிகா டி சில்வா, டொக்டர் மகேஷ் பிரியந்த, பிசியோதெரபிஸ்ட் கசுன் பிரபாசர மற்றும் நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் நிரோஷன் செனவிரத்ன, அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் ஊழியர்கள் இணைந்து சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக முன்னெடுத்து இருவரை வாழ வைத்துள்ளனர்.

இலங்கையில் அதிகளவான நோயாளர்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், உடல் உறுப்புகளைப் பெறுவது இலகுவான காரியமல்ல எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து எடுக்கப்படும் உறுப்புகள் எட்டு நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க முடியும் என்பதால், நோயாளியின் குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...