சினிமாசெய்திகள்

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

Share
3 10 scaled
Share

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கின்றன.. 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் கானா பாலா வெளியேறிய நிலையில் இந்த வாரம் மாயா, மணி, ரவீனா, அர்ச்சனா, விசித்திரா, பூர்ணிமா, அக்ஷயா, ப்ராவோ போன்றோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7-ல் ஒரு முக்கிய போட்டியாளர் விசித்திரா.. இவர் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் ஐட்டம் பாடலுக்கு பெயர் போனவர்.. இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் அதிக வயதுடைய விசித்ரா கேம்மை புரிந்து கொண்டு சூப்பராக விளையாடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பம் பற்றி கூற சொல்லி இருந்தனர்.. அப்பொழுது பேசிய விசித்ரா நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், இந்த படத்துல நடிக்கிற இல்ல, ரூமுக்கு வா என்று கூறி அழைத்திருக்கிறார்.

ஆனால் அன்று இரவு நான் என்னோட ரூமுக்கு போய் தூங்கி விட்டேன் அதனால் எனக்கு அப்போதிலிருந்தே பல்வேறு சிக்கல்களை கொடுத்தார்கள் சாயங்காலமானால் குடித்துவிட்டு கதவை தட்டுவார், பிறகு நான் தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜரின் உதவியால் வேறு ஒரு அறைக்கு மாறினேன்.

அந்த மேனேஜர் தான் பிறகு என்னோட கணவரானார்.. பிறகு கிராமத்தில் சூட்டிங் நடக்கும் பொழுது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அதை நான் ஸ்டென்ட் மாஸ்டரிடம் கூறினேன் ஆனால் அவர் என்னை கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்..

மேலும் இது பற்றி நான் சங்கத்தில் புகார் அளித்ததற்கும் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருமா என்று சொல்லி அந்த சங்கத் தலைவர் என்னை அனுப்பி வைத்துவிட்டார்.. இதையெல்லாம் நினைத்து தான் சினிமா துறையே வேண்டாம் என்று விலகி விட்டேன் என கண்ணீரோடு விசித்திரா பேசி இருக்கிறார்..

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...