tamilni 383 scaled
சினிமாசெய்திகள்

கணவர் இறந்த 7 மாதத்தில் மீண்டும் நடிக்க வந்த நடிகை.. இன்று தொடங்கும் சீரியலில் எண்ட்ரி..!

Share

பிரபலமான பல சீரியல்கள் நடித்த நடிகையின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் கணவர் இறந்த 7 மாதத்தில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் ’நாதஸ்வரம்’ சீரியலில் திருமுருகன் சகோதரியாக நடித்திருந்தார் என்பது அதன் பின்னர் ’பாரதி கண்ணம்மா’ ‘வாணி ராணி’ ‘கல்யாண பரிசு’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து ஸ்ருதி திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்தனர். மேலும் திருமணத்திற்கு பின்னர் சீரியல்களில் நடிப்பதையும் அவர் நிறுத்திவிட்டார்

இந்த நிலையில் திடீரென ஸ்ருதி கணவர் அரவிந்த் சேகர் ஒர்க் அவுட் செய்யும் போது மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் ஸ்ருதி நொறுங்கி போய்விட்டார். கணவர் மறைவுக்கு பின்னர் அவருடைய ஞாபகமாகவே இருந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் நடிப்பில் ஒளிபரப்பாக உள்ள ‘லட்சுமி’ சீரியலில் நாயகி ஸ்ருதி ராஜ் தோழியாக ஸ்ருதி சண்முகப்பிரியா நடிக்கவுள்ளதாகவும், இனி அடுத்தடுத்து அவருக்கு அதிக சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கணவர் மறைவின் சோகத்தை மறப்பதற்காக மீண்டும் நடிக்க வந்துள்ள ஸ்ருதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...