தங்கலான் படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் கசிந்த தகவல்
பா. ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றே வெளியாகவிருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக இருந்தது. அடுத்தாக தங்கலான் பாடலுக்காக தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பார்வதியின் பிறந்தநாள் என்பதால், அவருக்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தங்கலான் படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டில் கேஜிஎப் பின்னணியில் ஒரு தலைவன் எப்படி உருவாகிறான். அந்த தலைவனுடைய போராட்டம் எப்படி பிரிட்டிஷ் உடன் எப்படி இருந்தது. அந்த போராட்டத்தில் அவன் எப்படி வெற்றிபெற்றான் அது எப்படி மாபெரும் சாதனையாக மாறியது என்பதே படத்தின் கதை என சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 1 year of vikram
- chiyaan vikram
- kamal haasan vikram
- kamal haasan vikram title teaser
- vikram
- vikram 1986
- vikram 2
- vikram 2020 movie
- vikram 3
- vikram 3 cast
- vikram bgm
- vikram hitlist
- vikram hitlist (hindi)
- vikram kamal haasan title teaser
- vikram kamal movie
- vikram lyrics
- vikram mashup
- Vikram Movie
- vikram promo
- vikram shorts
- vikram song
- vikram songs
- vikram teaser
- vikram title teaser
- vikram title track
- vikram trailer
- vikram vs song