முதல் நாள் தங்கலான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா..

24 66bd6b847968b

முதல் நாள் தங்கலான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா..

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் – இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தங்கலான்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிலையில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 7 கோடி வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

 

Exit mobile version