சினிமாசெய்திகள்

என்னை கட்டிப்பிடிச்சிப்பாரு, அந்த ஈகோ அவருக்கு சுத்தமா கிடையாது- முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

Share
leo
Share

என்னை கட்டிப்பிடிச்சிப்பாரு, அந்த ஈகோ அவருக்கு சுத்தமா கிடையாது- முக்கிய பிரபலம் சொன்ன தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.சமீபத்தில் கூட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த ஆத்மா பேட்ரிக் என்பவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஸ்டன்ட் கலைஞர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதில் தளபதி விஜய் எப்போதுமே கவனமாக இருப்பார். விஷால் படத்திலும் நான் நடிச்சிருக்கேன். அவர் சில காட்சிகளில் ரியாலிட்டி வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் கட்டையாக இருந்தாலும் ஓகே சொல்வார். ஆனால், விஜய் ஒரு சின்ன குச்சியாக இருந்தாலும், அதை எடுத்து தட்டிப் பார்த்து தனக்கு வலிக்கிறதா என்பதை செக் செய்வார்

வலித்தால் உடனடியாக மாஸ்டரை அழைத்து மாற்றச் சொல்லிடுவார் என லியோ படத்தில் நடித்த ஆத்மா பேட்ரிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.காஷ்மீரில் ஜாலியா டூர் போயிட்டு படம் எடுத்துட்டு வரல, மைனஸ் 22 டிகிரில எல்லாம் ஃபைட் சீன் எடுத்துருக்கோம். என்னோட பாடி டெம்பரேச்சர் விஜய்க்கு தெரியும். நண்பா இங்கே வான்னு கூப்பிட்டு என்னை கட்டிப் புடிச்சிப்பாரு, பெரிய நடிகர் என்கிற ஈகோ எல்லாம் துளி கூட விஜய்க்கு கிடையாது.

பிகில் படத்திலும் அவருடன் பணியாற்றி உள்ளேன். அப்போ செம ஆக்டிவா இருப்பார். ஆனால், இங்கே ரொம்பவே டல்லாக இருந்தார். அந்த கேரக்டருக்காக தன்னை சோகமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் என்று பின்னர் தான் புரிந்தது. அவ்வளவு மெனக்கெடல். எவ்ளோ குளிரா இருந்தாலும், காலையில் ஷூட்டிங் வைத்தால் கூட மற்றவர்களுக்கு முன்பாக ஷார்ப்பாக ஆஜர் ஆகிவிடுவார் என்றார்.

ஆண்டனி தாஸ் நடிகர் சஞ்சய் தத் டீமில் தான் நான் நடித்துள்ளேன். அன்பறிவு மாஸ்டர் தான் என்னை இந்த படத்திற்கு தேர்வு செய்தனர். என்னை பொறுத்தவரையில் படத்தில் ஹைனா என்றால் அது அர்ஜுன் தான். வேறமாறி மிரட்டியிருப்பார் எனக்கூறி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார் ஆத்மா பேட்ரிக்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...