சினிமா

G.O.A.T படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி எப்படி இருக்கு தெரியுமா.. தளபதி விஜய் சொன்ன அதிரடி விமர்சனம்

Share
24 66c98b0fa89f1
Share

G.O.A.T படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி எப்படி இருக்கு தெரியுமா.. தளபதி விஜய் சொன்ன அதிரடி விமர்சனம்

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவன தயாரித்துள்ளது. மேலும் யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

G.O.A.T திரைப்படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார் என தகவல் தொடர்ந்து வெளிவந்தது. சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேப்டன் இல்லத்திற்கு சென்று பிரேமலதா, விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனை சந்தித்தனர்.

இதன்மூலம் G.O.A.T படத்தில் கேப்டன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கேப்டனின் இரு மகன்களுடனும் நடிகர் விஜய் மிகவும் ஜாலியாக பேசினாராம். மேலும் G.O.A.T படத்தில் விஜயகாந்த் அவர்கள் வரும் காட்சி பிரமாண்டமாக இருக்கிறது என்றும் பிரேமலதா விஜயகாந்திடம் கூறியுள்ளாராம் விஜய். இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தபோது கூறியுள்ளார்.

G.O.A.T திரைப்படத்தில் சுமார் 3.5 நிமிடங்கள் விஜயகாந்த் AI மூலம் தோன்றுவார் என கூறப்படுகிறது. அந்த காட்சியும் பிரமாண்டமாக வந்துள்ளது என விஜய் கூறியுள்ள நிலையில், கண்டிப்பாக திரையரங்கில் விஜயகாந்த் வரும் காட்சி வெறித்தனமாக இருக்கப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...