விஜய் – எச். வினோத் இணையும் ‘ஜனநாயகன்’: முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ வெளியீடு – 18 மணி நேரத்தில் 8.9 மில்லியன் பார்வைகள்!

125184983

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ நேற்று மாலை வெளியானது. இந்தப் பாடல் வெளியான 18 மணித்தியாலங்களுக்குள் யூடியூபில் 8.9 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘தளபதி கச்சேரி’ பாடலை விஜய், அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டப் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாடல் வெளியானதை ஒட்டி விஜய் ரசிகர்கள் உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Exit mobile version